Tuesday, December 10, 2013

திருவாழ்மார்பன் - திருப்பதி சாரம் (திருவண்பரிசாரம்)




"திருவாழ்மார்பன் - திருப்பதி சாரம் (திருவண்பரிசாரம்)

ஸ்தல வரலாறு :

இரண்யகசிபுவை கொன்ற நரசிம்மரின் உக்கிரம் தணிந்த பாடில்லை. தன் நாயகரை நெருங்க இயலாமல் தவித்த மகாலட்சுமி, தவத்தில் ஆழ்ந்தாள். அப்போதும் நரசிம்மரின் உக்கிரம் குறைய வில்லை. தேவர்களும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது சிறுவன் பிரகலாதன் பயமின்றி பக்தி பரவசத்துடன் பெருமாளின் கீர்த்தனைகளைப் பாட... சினம் தணிந்தார் நரசிம்மர். பிறகு, திருமகள் தவம் புரியும் இந்தத் தலம் வந்து, 'திரு'வாகிய அவளை தன் மார்பில் ஏற்று, திருவாழ்மார்பனாக அருள் புரிந்தார். எனவே, இத் தலம் ”திருப்பதிசாரம்” ஆனது வரலாறு .


”பரி' என்றால் குதிரை. ஒரு முறை குலசேகர மன்னனின் பட்டத்துக் குதிரை (வெண் குதிரை) காணாமல் போய் விட. அதை, இந்தத் தலத்தின் சோமலட்சுமி தீர்த்தக் கரையில் கண்டடைந்தாராம். எனவே, இந்தத் தலத்துக்கு திருவெண்பரிசாரம் என்று பெயர் (திருவாழ்மார்பனை தரிசித்த மன்னர் குலசேகரன், திருக்குளப் படித்துறை உட்பட கோயிலுக்கும் பல்வேறு திருப்பணி செய்துள்ளாராம்). வெண் குதிரையுடன் பகவான் எடுக்கப் போகும் கல்கி அவதாரத்தின் சாரமாக திகழும் தலம் ஆதலால், 'திருவெண்பரிசாரம்' எனப் பெயர் பெற்றது .

இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது

" வருவார் செல்வார் பரிவாரதிருந்த என்
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்
செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு
ஒரு பாடுழல்வான் ஓரடியானுமுள னென்றே

என்று நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செயப்பட்ட திவ்யா பிரதேசம் திருவண்பரிசாரம்.
108 திவ்ய தேசங்களில் திருவண்பரிசாரம் ஒன்றாகும் .3000 ஆண்டுகள் பழமை வாழ்ந்த கோவிலாகும். 



ஆனந்த மண்டபத்தை அடுத்து மூலவர் சன்னதி.  மூலவரான ”திருவாழ்மார்பன்” நான்கு


கைகளுடனும்சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன்அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் "கடு சர்க்கரை யோகம்என்ற கூட்டினால் உருவாக்கப்பட்டதாம் (கல்லும்சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல்கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்று சொல் வார்களாம்) அதனால் மூலவருக்கு  அபிஷேகமோ, அரளிப்பூ மாலை சார்த்துவதோ கிடையாதாம் புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறதாம். உற்சவருக்கே அபிஷேகம் நடைபெறுகிறது 

நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு,அருள் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் ”திருவாழ்மார்பன்”. இத்தல மூலவர் நரசிம்மரின் பெயரையே தனதாக்கிக் கொண்டவர். இவரின் மகள்,உடையநங்கைக்கும்,  திருக்குறுங்குடியை சேர்ந்த ”காரி” என்பவருக்கும் திருமணம் நடந்தேறியது. இல்லறம் இனிதே நடந்தது. ஆனால்குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இருவரும் குழந்தை வரம் வேண்டி இந்தத் தலத்தில் 41 நாட்கள் விரதம் அனுஷ்டித்தனர். இதன் பலனாக அவர்கள் பெற்றெடுத்த குழந்தையே நம்மாழ்வார்.தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தாராம திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும்,ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சொல்லபடுகின்றன 


அமைவிடம் :
இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது.

ஒம் நமோ நாராயணா

























No comments:

Post a Comment